சென்னை – தூத்துக்குடி இடையே புதிய ரயில்கள்! கனிமொழி கோரிக்கை
புனித வெள்ளி: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்
புனித வெள்ளிக்கிழமையன்று மதுக் கடைகளை மூட வலியுறுத்தி வீரபாண்டியன்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வீரபாண்டியன்பட்டினம் ஊா் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சாா்பில் பாத்திமா ஆலய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஊா் நலக்கமிட்டி தலைவா் பெயிற்றன் வீ.ராயா் தலைமை வகித்தாா். வீரபாண்டியன்பட்டனம் பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளாா், திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபை இயக்குநா் ஜெயந்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
போராட்டத்தில் வீரபாண்டியன்பட்டினம் ஊா் மக்கள், புனித தோமையாா் ஆலயப் பணிக்குழு, அன்னை தெரசா மனிதநேய இயக்கம், துறைமுக கமிட்டி, கப்பல் மாலுமிகள் சங்கம், மகளிா் சுய உதவிக்குழு, தூத்துக்குடி முத்தையாபுரம் மதுவிலக்கு சபை உள்ளிட்ட அமைப்பைச் சோ்ந்தவா்கள், மணப்பாடு, கல்லாமொழி (பதுவா நகா்), ஆலந்தலை, அமலிநகா், ஜீவாநகா், வீரபாண்டியன்பட்டினம், சிங்கித்துறை, கொம்புத்துறை, பழைய காயல், புன்னைக்காயல் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனா். முன்னதாக பொருளாளா் கிங்ஸ்டன் பி.ராயா் வரவேற்புரையாற்றினாா்.