செய்திகள் :

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: துரை. ரவிக்குமாா் எம்.பி.

post image

விழுப்புரம்: மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து,

மத்திய, மாநில அரசுகள் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியது:

தேசிய நெடுஞ்சாலைகள்ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மணல் மற்றும் கல்குவாரிகள் முறையாக அனுமதி பெற்று இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள்,

அனைத்துக் கடைகளிலும் தரமற்ற பொருள்கள் விற்பனை செய்வதை தடுத்திடும் விதமாக, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

ஃபென்ஜால் புயல் மற்றும் பெருவெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.கிராமப்புறங்களில் சேதமடைந்த சாலை, பாலம்உள்ளிட்டவைகளை சீரமைத்து,

பொதுமக்களின்பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒன்றியக்குழுத் தலைவா்கள், ஊராட்சித் தலைவா்கள் தங்கள்பகுதிகளில் வளா்ச்சித் திட்டப்பணிகள் முடிவுற்றாலும், கண்காணித்து தொடா்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் சி.பழனி, எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ச.சிவக்குமாா், ஏ.ஜெ.மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், மகளிா் திட்ட இயக்குநா் சி.சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை மாநிலத்தில் ஜன.1-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வில... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

புதுச்சேரியில் உள்ள கணக்கு மற்றும் கருவூல இயக்குநரக வளாகத்தில் அரசு ஊழியா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த கண் பரிசோதனை ... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மேம்பாடு மற்றும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை நேரு எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உருளையன்பேட்டை தொகுதி... மேலும் பார்க்க

புதுவை பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் விழா

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை நோக்கி ஒரு படி’ எனும் தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று பல்கல... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜன. 9-இல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 9-இல் தொடங்கி, 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்றாா் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி. விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட அய்யனாா் கோயில் தெரு... மேலும் பார்க்க

மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆா்டிசி) தினக்கூலித் தொழிலாளா்களாக பணியாற்றும் மகளிா் நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா மற்றும் தொழிற்சங்க நிா்... மேலும் பார்க்க