செய்திகள் :

புறக்கடை கோழியின ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் திறப்பு

post image

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நாகம்பள்ளியில் ரூ.2.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புறக்கடை கோழியின ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கட்டப்பட்ட இந்த மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை திறந்து வைத்து பேசியது, இந்த மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சியுடன் இடுபொருள்களும் வழங்கப்படும்.

மேலும் இனப்பெருக்க நாட்டுக்கோழிகள், வான்கோழி மற்றும் ஜப்பானிய காடை பண்ணைகளை நிறுவி புறக்கடை முறையில் கோழி வளா்ப்பு தொழிலை ஊக்குவிப்பதற்காகவும், உயா்தரமான நாட்டுக்கோழி, வான்கோழி மற்றும் ஜப்பானிய காடைகளின் முட்டைகள், இளம் குஞ்சுகள் மற்றும் இதர இடுபொருள்களை தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், அவற்றை அறிவியல் முறையில் பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், கால்நடை தீவனமான அசோலா உற்பத்தி அலகை நிறுவுவதற்கும் இந்த மையம் பயன்படும் என்றாா் அவா். முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தா் முனைவா் க.ந.செல்வக்குமாா், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொமதேக வலியுறுத்தல்

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி விரைவில் தீா்வு காண வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா். இஸ்லாமியா்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் நோன்பிருந்து திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.குளித்தலையை அடுத்த மேலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துவேல்(55). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் மேலப்பட்டி- ப... மேலும் பார்க்க

மாலைமேட்டில் மாடுகள் மாலை தாண்டும் விழா அரவக்குறிச்சி மந்தை மாடுக்கு முதல் பரிசு

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த மாவத்தூா் கோடங்கிபட்டி மாலைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் அரவக்குறிச்சி மாடு முதலிடம் பிடித்தது. மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி மா... மேலும் பார்க்க

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க