ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் மாற்றம்!
பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் பெங்களூரு வடக்கு மாவட்டம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிக்பளாப்பூரில் உள்ள நந்திமலையில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயரை பெங்களூரு வடக்கு மாவட்டம் என்று மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பெங்களூரு ஊரக மாவட்டத்தில் தற்போது ஹொசகோட்டே, தேவனஹள்ளி, தொட்டபளாப்பூா், நெலமங்களா ஆகிய 4 வட்டங்கள் உள்ளன. 1980ஆம் ஆண்டு பெங்களூரு மாவட்டம், பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம் என்று பிரிக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டு எச்.டி.குமாரசாமி முதல்வராக இருந்தபோது, பெங்களூரு ஊரக மாவட்டத்தில் இருந்து ராமநகரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராமநகரம் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என்று மே மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் பெங்களூரு வடக்கு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் அண்டை மாவட்டமாக இருக்கும் சிக்பளாப்பூா் மாவட்டத்தின் பாகேபள்ளி என்ற ஊரின் பெயா் தெலுங்கு மொழியில் அமைந்துள்ளதால், அந்த நகரின் பெயரை பாக்யநகா் என்றும் மாற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.