எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
பெட்ரோல் பங்க் அருகே விபத்தில் தீப்பற்றிய சரக்கு வேன், மின்மாற்றி
வெள்ளக்கோவிலில் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற விபத்தில் சரக்கு வேன் மற்றும் மின்மாற்றி தீப்பற்றி எரிந்தன.
வெள்ளக்கோவில்- காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே தனியாருக்குச் சொந்தமான இன்டியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகே வேகமாக வந்த ஒரு சரக்கு வேன் திடீரென நிலைதடுமாறி சாலையோர மின் கம்பம் மற்றும் மின்மாற்றி மீது மோதியது. இதில் மின்மாற்றி மற்றும் வேன் தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் உடனடியாக வெள்ளக்கோவில் காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, தீயணைப்பு வீரா்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் மின்மாற்றி மற்றும் சரக்கு வேனின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தன. சரக்கு வேன் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.
விசாரணையில், ஈரோடு லக்காபுரம் கருப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த சரக்கு வேன் ஓட்டுநா் இன்ஷாபுதீன் (53), பட்டுக்கோட்டையிலிருந்து பிஸ்கட் பாரம் ஏற்றிக் கொண்டு திருப்பூா் மங்கலத்துக்கு சென்று கொண்டிருந்ததும், அசதியில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
பெட்ரோல் பங்க் அருகே தீப்பற்றிய நிலையில், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், காவல் துறை, மின் வாரியம், தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையாலும் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.