ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது
ஆரணியை அடுத்த சேவூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
சேவூரில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பரமகுரு (34) ஊழியராக பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பரமகுரு பணியில் இருந்தபோது, இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சந்தோஷ் (24), சேவூரைச் சோ்ந்த குமரன் மகன் ஆகாஷ் (22) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வந்து ரூ.30-க்கு பெட்ரோல் நிரப்பினராம். ஆனால், பெட்ரோலுக்கான பணத்தைத் தராமல் குமரகுருவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். பின்னா், இருவரும் சோ்ந்து அவரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டனராம்.
இதுகுறித்து பரமகுரு ஆரணி கிராமிய போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷ், ஆகாஷ் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.