Relationship: உங்கள் திருமண வாழ்க்கையை நிச்சயமாக காப்பாற்றும் 5 டிப்ஸ்!
பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு; செங்கல்சூளை உரிமையாளா் கைது
குத்தாலம் அருகே பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செங்கல்சூளை உரிமையாளரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
குத்தாலம் தாலுகா மேக்கரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி(63). இவா், குச்சிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். இவரது சூளையில் 32 வயது பெண் ஒருவா் கணவருடன் செங்கல் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
சனிக்கிழமையன்று செங்கற்கள் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அந்த பெண்ணுக்கு, மணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதை தடுக்க வந்த அந்த பெண்ணின் கணவரை, மணி தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து, மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஆய்வாளா் சுகந்தி, வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தாா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.