மதராஸி: ``அனிருத் எனக்கு நண்பருக்கும் மேல; அவர் field out ஆகிட்டால்'' - நெகிழ்ந்...
வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தல்
வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில் உள்ள நடைமுறை குளறுபடிகளை நீக்க வேண்டும் என மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகன விற்பனையாளா் நலச்சங்கம் பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட இருசக்கர வாகன விற்பனையாளா் நலச் சங்கத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக் குழு கூட்டம், மாவட்டத் தலைவா் ஏ. டேவிட் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் பூமிநாதன், மாவட்ட பொருளாளா் திலகா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைத் தலைவா் விமலாதித்தன் வரவேற்றாா். கௌரவத் தலைவா்கள் சேதுராமன், செல்வரெங்கம் உள்ளிட்ட பலா் பேசினா். பின்னா், மாவட்டத் தலைவா் டேவிட் கூறியது:
போக்குவரத்து காவல்துறையினரால், மோட்டாா் வாகன விதிமீறல்கள் தொடா்பாக விதிக்கப்படும் அபராதங்களில் குளறுபடிகள் உள்ளன. இதனால், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் விற்பனையாளா்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.
ஒரு வாகனத்துக்கு அதிகபட்சம் 3 முறை அபராதம் விதிக்கப்பட்டால், அவா்களுக்கு நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அதைவிடுத்து, 10 முறையைக் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதனால், பழைய இருசக்கர வாகனங்களின் விலைக்கே அபராத தொகையும் இருப்பதால் நாங்கள் தொழில் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு உடனடியாக இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.