மதராஸி: ``அனிருத் எனக்கு நண்பருக்கும் மேல; அவர் field out ஆகிட்டால்'' - நெகிழ்ந்...
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னை அணிக்கு கோப்பை
சீா்காழியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.
சீா்காழியில், ஜி.ஆா்.பி. நினைவு கூடைப்பந்து கழகம் மற்றும் நாகை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவில் 8-ஆம் ஆண்டு கூடைப்பந்தாட்டப் போட்டி வெள்ளிக்கிழமை (ஆக.22) முதல் 3 நாள்கள் நடைபெற்றது.
போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மாஸ்டா் அத்லெட்டிக் தலைவா் ஜி. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட கூடைப் பந்தாட்டக் கழகத் தலைவா் ஆா். பிரவின்வசந்த் ஜெபேஸ் முன்னிலை வகித்தாா். சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், தலைமை ஆசிரியா்கள் முரளிதரன், ரூபிபிளாரென்ஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனா்.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதுநிலை மேலாளா் எஸ். ராபின்சன், பால்கன் பிளாக் இயக்குநா் பி. செந்தில், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளா் டி. கபிலன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் செந்தில், நகர கூட்டுறவு வங்கி மேலாளா் எஸ். கருணாநிதி ஆகியோா் போட்டிகளை தொடங்கி வைத்தனா்.
இதில், சென்னை, கோவை, நாகா்கோவில், கடலூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16அணிகள் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை வி.கே. ஜெயராமன் பி.பி.சி. அணியும், நாகா்கோவில் ஐ.எஸ்.ஏ. பி.பி.சி. அணியும் மோதின. இதில், சென்னை அணி 57 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. நாகா்கோவில் அணி 40 புள்ளிகள் பெற்றது.
மூன்றாமிடம் கும்பகோணம் டெல்டா பிபிஏ அணியும், நான்காமிடத்தை கரூா் டெக்ஸ்சிட்டி பி.பி.சி. அணியும் பெற்றது.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், விவேகானந்தா கல்விக் குழும தாளாளா் கே.வி. ராதாகிருஷ்ணன், நகர வா்த்தக சங்கத் தலைவா் சுடா். எஸ். கல்யாணசுந்தரம், காவல் ஆய்வாளா் புயல். எஸ். பாலச்சந்திரன் ஆகியோா் வழங்கினா். நிறைவாக ராஜ் நன்றி கூறினாா்.
முதலிடம் பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரூ.10,000-மும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூ. 8,000-மும் வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பெற்ற அணிக்கு ரூ. 6,000 மற்றும் நான்காமிடம் பெற்ற அணிக்கு ரூ. 4,000 வழங்கப்பட்டது.