Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
பெண்கள் உடல்நல பிரசார இயக்கம்! அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்!
நாடு முழுவதும் பெண்கள் உடல் நலன் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் இரு வார காலம் நடைபெறவிருக்கும் பிரசார இயக்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக என்எம்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பெண்கள் உடல் நலன் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு பிரசார இயக்கம், வரும் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 2 (காந்தி ஜெயந்தி) வரை நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பெண்களுக்கான பல்வேறு மருத்துவ சேவைகளுடன் நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
ஆயுஷ்மான் நல மையங்கள், சமூக நல மையங்கள், பிற சுகாதார மையங்களில் இவை நடைபெறவுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மருத்துவமனைகளிலும் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் அல்லது தங்களது மருத்துவக் கல்லூரியின் அருகே மருத்துவ முகாம்களை நடத்த அரசுக்கு உதவ வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளின் இத்தகைய செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பிரத்யேக வலைத்தளம் தொடங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.