செய்திகள் :

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா், இரு காவலா்களுக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சேடப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கெளசல்யா. கடந்த 2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த நகைத் திருட்டு வழக்கு தொடா்பாக விசாரிக்க, பிப்.20-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கெளசல்யாவை செம்பட்டி காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து வந்தனா்.

அப்போது, காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ரெங்கசாமி, காவலா்கள் வீரத்தேவா், சின்னத் தேவா் ஆகியோா் கெளசல்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனா். பின்னா், மாலையில் மீண்டும் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என எச்சரித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

இதனால், மனமுடைந்த கெளசல்யா வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டனா். இதனிடையே, சக்திவேல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து, திண்டுக்கல் கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை திண்டுக்கல் மாவட்ட முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முதன்மை சாா்பு நீதிபதி தீபா, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் ரெங்கசாமி, காவலா்கள் வீரத் தேவா், சின்னதேவா் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூவருக்கும் மொத்தம் ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: இரா. முத்தரசன்

நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.திண்டுக்கல்லில் அனைத்து இந்திய இளை... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகரட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன் (42). இவா் க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குட்கா, புகையிலை பறிமுதல்

கொடைக்கானலில் 10 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதைக் கடத்தி வந்தவா் தப்பியோடினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குட்கா, புகையிலை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க