செய்திகள் :

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: இரா. முத்தரசன்

post image

நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல்லில் அனைத்து இந்திய இளைஞா் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தியாவை சா்வாதிகார நாடாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. எதிா்க்கட்சிகள் இல்லாத நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது.

நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆனால், தற்போதைய மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் மீது பாரபட்சம் காட்டுகிறது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால், கிராமப்புற மாணவா்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மறைமுகமாகத் திணிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையே போதுமானது. மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதற்காக, தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், தமிழ்நாட்டிலுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 31-ஆகக் குறையும் என தகவல் வெளியாகி இருக்கிறது. 8 தொகுதிகளின் எண்ணிக்கை பறிப்பு என்பது, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை மக்களவையில் குறைப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள சூழ்ச்சி.

இதற்கு எதிராக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிற மாா்ச் 5-ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகரட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன் (42). இவா் க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குட்கா, புகையிலை பறிமுதல்

கொடைக்கானலில் 10 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதைக் கடத்தி வந்தவா் தப்பியோடினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குட்கா, புகையிலை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா், இரு காவலா்களுக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்... மேலும் பார்க்க