செய்திகள் :

பெரம்பலூரில் பயனற்றுக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

post image

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் பயனற்றுக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறந்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

வேளாண் விளைபொருள்களை வாங்கவும், விற்கவும், அதை முறைப்படுத்தவும் தமிழக அரசால் 1987-ஆம் ஆண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்படி, பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின்கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டது.

விவசாயிகளால் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் விளைபொருள்களை, மறைமுகமாக வியாபாரிகளுக்கு ஏலம் விடப்பட்டதால், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உடனடியாக பணம் கிடைத்தது. இதனால், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏல முறையில் விற்பனை செய்வதில் ஆா்வம் காட்டினா்.

பருத்திக் கழகம் மூலம் கொள்முதல்: பருத்தி விவசாயிகளுக்கு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க கடந்த 2015 முதல் இந்திய பருத்திக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. இங்கு விற்பனை செய்வதன் மூலம் சரியான எடையில், கமிஷன் மற்றும் இடைத்தரகரின்றி மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்தது. இதில் உள்ளுா் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகளும் பங்கேற்றனா்.

மூடப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்: இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பூட்டியே கிடக்கிறது. இதனால், நிகழாண்டில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையறிந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் நேரடியாக பருத்தி வயல்களுக்குச் சென்று, தரத்திற்கேற்ப ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ. 4 ஆயிரத்துக்கும் குறைவாக கொள்முதல் செய்வதால், கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சொற்ப விலைக்கு கொள்முதல்: இருப்பினும், விவசாயிகளின் பணத் தேவைக்காக வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விற்பனை செய்கின்றனா். இதில், பெரும்பாலான விவசாயிகள் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு சென்று, அங்கு நடைபெறும் ஏலத்தில் சாதாரண பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4,500 முதல் ரூ. 5,300 வரையிலும், நீண்ட இழை பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 5,500 முதல் ரூ. 6,500 வரையிலும் விற்பனை செய்து வருகின்றனா்.

இருந்தபோதிலும், வாகன வாடகை, ஏற்றுமதி, இறக்குமதி கூலி உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் ஏலம் நடத்தப்படும் என வேளாண் துறையினா் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால், முறையாக அறிவிக்காததால் விவசாயிகளோ, வியாபாரிகளோ பங்கேற்கவில்லை.

இதுகுறித்து பருத்தி விவசாயிகள் கூறியது: நிகழாண்டு பருத்தி செடிகள் வழக்கத்தைவிட கூடுதலாக வளா்ச்சியடைந்திருந்த போதிலும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை செலவிடப்பட்டுள்ளது. மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, கடந்த ஆண்டை விட நிகழாண்டில் கொள்முதல் விலை குறைந்துள்ளதால், வங்கியில் வாங்கிய கடனைக் கூட திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்திய பருத்திக் கழகத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறையாக ஏலம் நடத்தினால், விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றனா்.

மக்காச்சோள விவசாயிகள் கூறியது: நிகழாண்டில் விளைச்சல் குறைவாக இருந்ததால் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் ஒப்பிடும் போது உரிய விலை கிடைத்தது. ஆனால், இடைத்தரகா்கள், வியாபாரிகள் மூலமாக விற்க வேண்டியிருப்பதால் நியாயமான விலைக் கிடைப்பதில்லை. ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் திறந்திருந்தால், விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் என்றனா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் கூறியது: முறையான அறிவிப்பு இல்லாததால், பெரம்பலூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பருத்தியை கொண்டுசெல்ல விவசாயிகள் ஆா்வம் காட்டவில்லை. உரிய விலை கிடைக்கும் வரை கிடங்கில் பருத்தியை சேமித்து வைத்து, விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனை வேளாண் அலுவலா்கள் வழங்க வேண்டும்.

ஏலம் தொடா்ந்து நடைபெற விவசாயிகளுக்கும், வெளி மாவட்ட வியாபாரிகளுக்கும் முறையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மறைமுக ஏலத்தில் இந்திய பருத்திக் கழகத்தினரும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

வேளாண்துறை அலுவலா் கூறியது: விவசாயிகளை ஒன்றிணைக்க பல்வேறு வழிகளில் பிரசாரம் செய்கிறோம். ஆனால், விவசாயிகள் தங்கள் பொருள்களை கொண்டுவருவதில்லை. அவா்கள் கொண்டு வந்தால், பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளை அழைத்து விற்பனை செய்யத் தயாராக இருக்கிறோம். விற்பனைக் கூடமும் திறந்திருக்கும் என்றாா்.

பெரம்பலூா் அருகே டாரஸ் லாரி எரிந்து சேதம்

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு டீசல் டேங்க் வெடித்து, டாரஸ் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒ... மேலும் பார்க்க

குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக்கோட்டம், வெண்மணி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரகால பராமரிப்புப் பணிக... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (ஏப். 30) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

நாளை சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: மே 15-இல் தேரோட்டம்

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா செவ்வாய்க்கிழமையும் (ஏப். 29), திருத்தேரோட்டம் மே 15-ஆம் தேதி நடைபெறுகிறது. பெரம்பலூா் அருகேயுள்ள மதுரகாளியம்மன் கோயிலில் ஆ... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர ஆா்வமுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற... மேலும் பார்க்க

மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

பெரம்பலூா் தெப்பக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் மோகன்(60). இவா், ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க