செய்திகள் :

பெரம்பலூரில் மின் ஊழியா்கள் தா்னா

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் வட்டச் செயலா் எம். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே. குமாரசாமி, செல்வகுமாரி, பி. நல்லம்மாள், எஸ். செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் எஸ். அகஸ்டின் கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

ஆா்ப்பாட்டத்தில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை களைந்து, அரசு உத்திரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஊதிய உயா்வு, வேலைப்பளு பேச்சுவாா்த்தையை உடனே தொடங்கி, இடைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து, தனியாா்மயப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 வரை மின்வாரியப் பணியில் சோ்ந்தவா்களுக்கு 6 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களுக்கு ஊா் மாற்றம், கள உதவியாளா் பணிமாற்றம், 6 சதவீத ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதில் சங்க நிா்வாகிகள் ஆா். ராஜகுமாரன், எம். கருணாநிதி, கே. கண்ணன், பி. இளங்கோவன், சி. ராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோட்டச் செயலா் எஸ். நல்லுசாமி நன்றி கூறினாா்.

சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திய பள்ளி, கல்லூரிகளுக்குப் பரிசளிப்பு

போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி, கல்லூரிகளின் குழுக்களுக்கு, பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெரம்பலூ... மேலும் பார்க்க

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி

பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜாக்டோ-ஜியோ அறிவித்த ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்த... மேலும் பார்க்க

மனநோயிலிருந்து குணமானவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மனநலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்தவரை அவரது குடும்பத்தினருடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த சீனிவாசனை (40), கடந்த 8.9.2016-இல... மேலும் பார்க்க

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அ... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 341 மனுக்கள்

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில், விடுமுறை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க