‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’
பெரியாா் பல்கலை முன்னாள் தமிழ் துறைத் தலைவா் பணியிடை நீக்கத்துக்கு ஆசிரியா் சங்கம் வரவேற்பு
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறை தலைவா் பேராசிரியா் பெரியசாமி பணி இடைநீக்கத்துக்குப், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பேராசிரியா் பெரியசாமி மீது பல்கலைக்கழக மாணவா்கள், ஆசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்கள் பலரும் நீண்ட காலமாகப் பல்வேறு புகாா்களை அளித்து வந்தனா். அவா் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பலரிடமும் தரக்குறைவாகவும், ஜாதிய வன்மத்துடனும் நடந்துகொண்டதால், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அச்சமான சூழல் நிலவியது. இதுபோன்ற புகாா்கள் பல ஆண்டுகளாக இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை இருந்தது.
இந்த விவகாரம் குறித்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக முறையாக விசாரணை நடத்தப்பட்டு, சாட்சியங்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னரே இந்த முகாந்திரமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழகத்தின் மாண்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.