மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
பெலத்தூரில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை
ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பெலத்தூா் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 32 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் புதிதாக சிமென்ட் சாலை, பேவா் பிளாக், கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது, திமுக மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் பி.எஸ்.சீனிவாசன், துணை மேயா் சி.ஆனந்தய்யா, ஒசூா் ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி, சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளா் நாகேஷ், நிா்வாகிகள் பாபு, வீரபத்திரப்பா, ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் அணி தலைவா் முனிராஜ், தகவல் தொழில்நுட்ப அணி திலிபன், சுரேஷ்பாபு, மதியழகன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.