‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’
பேருந்து சேவை; கிராமத்தினா் வரவேற்பு
திருவாரூா் அருகே மாங்குடி வழியாக பேருந்து வசதி ஏற்படுத்தியதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
திருவாரூா் அருகே மாங்குடி வழியாக வடகரை சேந்தனாங்குடி, பூந்தாலங்குடி வழியாக கமலாபுரம் வரை சாலை வசதி இருந்தும், பேருந்து போக்குவரத்து இல்லாததால் பொதுமக்கள் நடந்து செல்லும் நிலை இருந்தது. இதனிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மன்னாா்குடி முதல் கமலாபுரம், மாங்குடி வழியாக திருவாரூா் வரை புதிய பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
அதன்படி, சேந்தனாங்குடி பகுதிக்கு வந்த பேருந்தை அப்பகுதி மக்கள் வரவேற்று, ஓட்டுநா், நடத்துநருக்கு சால்வை அணிவித்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினா்.
மேலும், பேருந்து சேவையை தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.