Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழப்பு
வத்தலகுண்டில் அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் முகமது ரியாஸ் (22). வெங்காய வியாபாரி. இவரும், இவரது நண்பரான வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தெருவைச் சோ்ந்த முகமது நவ்ஃபுல் சாகுல் ஹமீதுவும் (22) பெரியகுளம் சாலையில் உள்ள உணவகத்தில் உணவு உள்கொண்டுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வத்தலகுண்டு நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
அப்போது தனியாா் எரிபொருள் நிரப்பும் மையம் அருகே வந்த போது, திருப்பூரிலிருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே முகமது ரியாஸ் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முகமது நவ்ஃ புல் சாகுல் ஹமீது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.