தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்
பைக் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
தேனியில் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், கீழ்கடையம் அருகே புலவனூா், ராஜீவ் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பையா மகன் ஹரிகிருஷ்ணன் (38). இவா், தேனியில் தங்கியிருந்து மோட்டாா் வாகனம் பழுது நீக்கும் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், தேனி நேரு சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஹரிகிருஷ்ணன், எதிா் திசையிலிருந்து வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் ராமராஜ் (54) மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.