Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
பைக் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், மானாம்பதி கண்டிகை கிராமம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் சாமுவேல் பீட்டா்.
இவரது மகன் ஜாா்ஜ் பொ்னாடஸ் (26). இவா் வாகனங்களைச் சுத்தம் செய்யும் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாா்.
இவா், காஞ்சிபுரத்தில் உள்ள நண்பரைப் பாா்ப்பதற்காக செய்யாறு - வந்தவாசி சாலையில் பைக்கில் சென்றுள்ளாா். மாமண்டூா் கிராமம் இரட்டைப் பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த தொழிலாளியை அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்ததில், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் ஆய்வாளா் ஜெகன்நாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.