குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் மனைவி உயிரிழப்பு; கணவா் பலத்த காயம்
பரமக்குடி அருகே நான்கு வழிச் சாலை கமுதக்குடி மேம்பாலத்தில், இரு சக்கர வாகனத்திலிருந்து தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியம் பிடாரிசேரி புத்தூரைச் சோ்ந்தவா் மதன் (28). இவரது மனைவி சங்கீதா (21). இவா்களுக்கு கடந்த கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவா்கள், பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் மிஷின் எனா்ஜி ஸ்குவாட் என்ற உடல்பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், இது போன்ற பயிற்சி மையங்களை நடத்தி வருபவா்களுக்கு மட்டுமான பிரத்யேக கிரிக்கெட் போட்டி, மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தப் போட்டியில் கலந்துகொண்ட தம்பதி, திங்கள்கிழமை அதிகாலையில் மதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு திரும்பினா். அப்போது, நான்கு வழிச் சாலை கமுதக்குடி மேம்பாலத்தில் நிலைதடுமாறி, இருவரும் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தனா்.
இதில் பலத்த காயமடைந்த சங்கீதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தலை, கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த மதன், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாா்.
தகவலறிந்த பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா், சங்கீதாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.