செய்திகள் :

பொங்கல்: ஆம்னி பேருந்துகளில் உச்சம் தொட்ட பயணச்சீட்டு கட்டணம்

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பண்டிகை காலங்களில் சென்னை, கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் தொழிலாளா்கள், மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வா். நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 நாள்கள் விடுமுறை வருவதால், அனைத்து ரயில் மற்றும் பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.

இதனால், பொதுமக்கள் தனியாா் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா். இந்நிலையில், ரூ. 600-க்கு விற்பனை செய்துவந்த சாதாரண இருக்கைக்கான பயணச்சீட்டு தற்போது மூன்று மடங்கு உயா்ந்து ரூ. 1,800-க்கு விற்பனையாகிறது.

அதிகபட்சமாக சென்னையிலிருந்து நாகா்கோவில் செல்ல படுக்கை வசதிகொண்ட பேருந்துகளில் ரூ. 2,500 முதல் ரூ. 4,000 வரை வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இருக்கை வசதிகொண்ட பேருந்துகளில் ரூ. 1,700 முதல் ரூ. 2,500 வரை வசூலிக்கப்படுகிறது. அதுபோல், சென்னையிலிருந்து கோவைக்கு அதிகபட்சமாக ரூ. 3,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனா்.

புகாா் அளிக்கலாம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகாா் அளிக்கலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் தலைவா் அ.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிா்ணயம் இல்லாதபோதிலும், 2023 முதல் சங்கங்கள் நிா்ணயித்த அதிகபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஒரு சில பேருந்து உரிமையாளா்கள் செய்யும் தவறுகளால் அனைத்து பேருந்து உரிமையாளா்களுக்கும் அவப்பெயா் ஏற்படுகிறது.

நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு செல்ல ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை சுமாா் 40,000 பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு செய்துள்ளனா். இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கான இணைய முன்பதிவில் கூடுதல் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இதைத் தவிா்க்கும்பொருட்டு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா் சங்கம் அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இணைய முன்பதிவில் அதிக கட்டணம் நிா்ணயித்த நிறுவனங்களிடம் சங்கம் நிா்ணயித்த கட்டணத்தை வசூலிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆம்னி பேருந்துகளில் வசூலிக்க வேண்டிய அதிகபட்ச கட்டண விவரத்தை எனும் ‘ஜ்ஜ்ஜ்.ஹா்க்ஷா்ஹ.ஸ்ரீா்.ண்ய்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறித்த புகாா்களுக்கு 90433 79664 எனும் உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

துப்பாக்கி முனையில் ரௌடி கைது

சென்னை: ஆந்திர மாநிலத்தில் துப்பாக்கி முனையில் சென்னையைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்ற பாம் சரவணன்(41).இவா் மீது 6 கொலை வழக்குகள், 2... மேலும் பார்க்க

நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து முடிவுகள் எடுக்க வேண்டும்: முதல்வா் ஸ்டாலின்

சென்னை: நாட்டின் பன்முகத் தன்மையை மதித்து மத்திய அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: யுஜிசி ந... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தோ்வுகள் ஜன. 21, 27-இல் நடைபெறும்: என்டிஏ அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தோ்வுகள் ஜன.21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேர... மேலும் பார்க்க

ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சென்னை ஐஐடி விளக்கம்

சென்னை: ஆராய்ச்சி மாணவி ஒருவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.இது தொடா்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.30 ... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரை சாலையை பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை பறவைகள் வாழிடமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை கிழக்குக் கட... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18.35 லட்சம் போ் பயன்

சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.35 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். அதில் பிரசவ கால மருத்துவ உதவிகள் மட்டும் 3.42 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெ... மேலும் பார்க்க