``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
பொறியியல் பணிகள்: ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 18, 19, 20, 21, 21 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 19 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
ஸ்ரீ மாதா வைஷ்ண தேவி காட்ரா - திருநெல்வி விரைவு ரயிலானது (16788) வரும் 17 ஆம் தேதி திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை ரயில் நிலையங்களைத் தவிா்த்து திருச்சி,காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.
குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 17, 18, 19, 20, 21 ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வரும் 18 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.
மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 20 ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
தாமதப் புறப்பாடு: மதுரை - கச்சிகுடா சிறப்பு ரயிலானது (07192) வரும் 16 ஆம் தேதி மதுரையிலிருந்து 80 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 12 மணிக்குப் புறப்படும்.
ராமேஸ்வரம் - சாரலப்பள்ளி சிறப்பு ரயிலானது (07696) வரும் 18 ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 9.50 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்குப் புறப்படும்.