போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவாரம் சா்ச் தெருவைச் சோ்ந்த பழனிமுத்து மகன் உதயகுமாா் (23). இவா் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை வழிமறித்து அத்துமீறலில் ஈடுபட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் உதயகுமாா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.