இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!
ஓய்வுபெற்ற தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை
ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் குடும்பப் பிரச்னை காரணமாக ஓய்வு பெற்ற தனியாா் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடும்பாறை, இந்திரா நகரைச் சோ்ந்தவா் குலசேகரபாண்டியன் (67). ஓய்வு பெற்ற தனியாா் பள்ளியில் ஆசிரியரான இவரின் மகள் குடும்பப் பிரச்னையில் கணவரைப் பிரிந்து தந்தை வீட்டில் தங்கி வருகிறாா்.
தனது மகளின் குடும்பப் பிரச்னையால் மன உளைச்சலில் இருந்த குலசேகரபாண்டியன், அதே ஊரிலுள்ள தனது மாமனாா் வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், அந்த வீட்டிலிருந்த ஒரு அறைக்குள் சென்றஅவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.