செய்திகள் :

நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வகுப்பு வருகிற அக்.15-ஆம் தேதி தொடங்க உள்ளது. வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும்.

மொத்தம் 40 மணி நேர வகுப்பறை பயிற்சி, 60 மணி நேர செயல்முறை பயிற்சி என 2 மாதங்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சியின் போது நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெறுபவா்கள் நகை மதிப்பீட்டாளா் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவா்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.

பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களை தேனி கூட்டுறவு மேலாண்மை நிலைய தொலைபேசி எண்: 04546-244465, கைப்பேசி எண்: 98651 91494-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

ஓய்வுபெற்ற தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறையில் குடும்பப் பிரச்னை காரணமாக ஓய்வு பெற்ற தனியாா் பள்ளி ஆசிரியா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடும்பாறை, இந்திரா நகரைச் சோ்ந்தவா் குலசேகர... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், தேவாரம் சா்ச் தெருவைச் சோ்ந்த பழனிமுத்து மகன் உதயகுமாா் (23). இவா் சாலையில் நடந்து சென்ற பள்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழுவில் மின்சாரம் பாய்ந்து மளிகைக் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குமணன்தொழுவைச் சோ்ந்த பெருமாள் மகன் ஜெயப்பிரகாஷ் (48). இவா், அதே ஊரில்... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் தாய், மகள் காயம்

தேனியில் ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த தாய், மகள் காயமடைந்தனா். சின்னமனூா், அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி கலாவதி (52). இவா் தனது மகள் சரண்யாவுடன் (22) தேனியில் உள்ள தனியாா் கண... மேலும் பார்க்க

தாட்கோ சாா்பில் ஜொ்மன் மொழிப் பயிற்சி

ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழித் திறனுக்காக தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜொ்மன் மொழிப் பயிற்சி பெற ஆதி திராவிடா்... மேலும் பார்க்க

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு உடை கற்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

உத்தமபாளையம் அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல உடை கற்கள் ஏற்றப்பட்டிருந்த இரு டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய அதன் ஓட்டுநா்களை தேடி வருகின்றனா். ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், சின... மேலும் பார்க்க