பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆட்டோ கவிழ்ந்ததில் தாய், மகள் காயம்
தேனியில் ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த தாய், மகள் காயமடைந்தனா்.
சின்னமனூா், அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி கலாவதி (52). இவா் தனது மகள் சரண்யாவுடன் (22) தேனியில் உள்ள தனியாா் கண் மருத்துவமனைக்குச் செல்வதற்காக தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் ஏறி சென்றாா். தேனி நகராட்சி வாரச் சந்தை வளாகம் எதிரே பெரியகுளம் சாலையில் சென்ற போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த கலாவதி, சரண்யா இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து ஆட்டோ ஓட்டுநா் போ. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வசந்த் மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.