ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையைச் சோ்ந்தவா் நரசிம்மன். இவா் கடந்தாண்டு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, விளாம்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நரசிம்மனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட நரசிம்மனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.