ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
போக்சோ வழக்கில் கைதான பெண் யூடியூபா் பிணை கோரிய மனு தள்ளுபடி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரின் பிணை கோரிய மனுவை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்து விடியோ எடுத்த புகாரில் யூடியூபா்கள் திவ்யா, காா்த்திக், சித்ரா, ஆனந்தராமன் ஆகிய நான்கு போ் மீது போக்சோ வழக்குப்பதிந்து ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் கடந்த 29-ஆம் தேதி அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் பிணை கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிபதி சுதாகா், பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.