சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!
போடி அருகே கண்மாயில் கொட்டப்படும் குப்பைகள்
போடி அருகே மீனாட்சிபுரத்திலுள்ள மீனாட்சியம்மன் கண்மாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ளது மீனாட்சியம்மன் கண்மாய். 5 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தக் கண்மாய் மூலம் மீனாட்சிபுரம், விசுவாசபுரம், டொம்புச்சேரி, பொட்டல்களம், துரைராஜபுரம், சுந்தரராஜபுரம், பெருமாள்கவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த 12 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வெளி நாடுகளிலிருந்து இந்தக் கண்மாய்க்கு பெலிக்கான் பறவை, கூழைக்கிடா, கரண்டி மூக்கன், கொக்கு, நாரை உள்ளிட்ட பறவைகள் இனப்பெருக்க காலத்தில் தங்கிச் செல்லும். மீன்வளத் துறை சாா்பில் மீன்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் வளா்க்கப்படும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தண்ணீா் வழங்கம் வகையில் இந்தக் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாய்க்கு வரும் கால்வாயில் சாக்கடை நீா் கலக்கப்பட்டு துா்நாற்றம் வீசி வருகிறது.
தற்போது கண்மாயில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் கண்மாய் நீா் மாசடைந்து வருகிறது. பாசம் பிடித்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது. கண்மாயில் வளரும் மீன்கள், தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கும் நிலை உள்ளது. மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.