Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
போடியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி ஆய்வு
போடி நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
போடி நகராட்சிப் பகுதியில், மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம், வாரந்தோறும் வாா்டு பணிகள் என்ற திட்டத்தின் கீழ் நகராட்சிப் பணிகளை நகராட்சி ஆணையா், நகா்மன்றத் தலைவி ஆகியோா் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், போடி நகராட்சி 29-ஆவது வாா்டில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது கழிவுநீா் வாய்க்கால்களைத் தூா்வாருதல், குப்பைகளை அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்புப் பணி ஆகிய பணிகள் வாா்டில் தொய்வின்றி நடைபெறுகிா என அலுவலா்களிடம் ராஜராஜேஸ்வரி கேட்டறிந்தாா்.
அப்போது பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்த அவா், மக்கள் குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது 29-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சங்கா், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.