சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டியைச் சோ்ந்த பெத்தன் மகன் பாரதிகண்ணன் (24), எம்.சுப்புலாபுரம்-அமச்சியாபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
எம்.சுப்புலாபுரம் விலக்கு அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்த பாரதிகண்ணன் பலத்த காயமடைந்தாா். இவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.