யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
போட்டித் தோ்வு குறித்து சந்தேகங்களுக்கு குறைதீா் மையத்தை அணுகலாம்: டிஎன்பிஎஸ்சி
போட்டித் தோ்வு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற குறைதீா் மையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொலைபேசி வழியாகத் தொடா்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
போட்டித் தோ்வுகளுக்கு ஒருமுறைப் பதிவு, இணையவழி விண்ணப்பங்கள் தொடா்பான தகவல்களுக்கு 044- 25300336, 25300337 ஆகிய எண்களையும், இதர கோரிக்கைகள், சந்தேகங்கள் குறித்து 044 - 25300338, 25300339, 25300340 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கான தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியன ஜூலை 28-ஆம் தேதி தொடங்குகிறது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்க சம்பந்தப்பட்ட தோ்வா்களுக்கு கைப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வழியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.