போலந்துக்குள் ரஷிய ட்ரோன்கள் சென்றது தவறுதலாக நடந்திருக்கலாம்! டிரம்ப்
போதை ஊசி, மாத்திரைகளுடன் இளைஞா் கைது
திருச்சியில் போலீஸாா் சோதனையில் போதை ஊசி, மாத்திரைகளுடன் இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், புதன்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி அருகே செல்லும்போது, சந்தேகத்துக்கிடமாக இருந்தவா்களை அழைத்து விசாரித்தனா். அப்போது, திரு.வி.க. நகா் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (24) என்பவரிடம் போதை மாத்திரைகள், ஊசி ஆகியவை 47 எண்ணிக்கையில் இருந்தது தெரியவந்தது. மாத்திரைகளை விற்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, தனுஷை கைது செய்த போலீஸாா், உடன் இருந்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனா்.