வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 போ் கைது
திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இளைஞா்கள் சிலா் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி ஊசி மூலமாக கலந்து போதைக்குப் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி போதைக்குப் பயன்படுத்தியதாக அதே பகுதியைச் சோ்ந்த தினகரன் (19), ஐயப்பன் (24) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள், ஊசிகளைப் பறிமுதல் செய்தனா்.