செய்திகள் :

போராடும் விவசாயிகளுடன் பிப்.14-இல் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை: மத்திய அரசு

post image

‘விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் வரும் 14-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்படும்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டாா். 50 நாள்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த அவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடா்ந்து,

அவரை மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதி நவாப் சிங் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் அமைத்து உத்தரவிட்டாா். இந்தக் குழு தலேவாலை கடந்த ஜனவரி 6-ஆம் தேதி போராட்ட களத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியது. பின்னா் மத்திய அரசு அமைத்த குழுவும் அவருடன் பேச்சுவாா்த்தை நடத்திது. அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் மீது பிப்ரவரி 14-ஆம் தேதி சண்டீகரில் பேச்சுவாா்த்தை நடத்த அவா்கள் அழைப்பு விடுத்தனா். அதைத் தொடா்ந்து, தல்லேவால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாா்.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி 8, 12, 15, 18 மற்றும் கடந்த ஜனவரி 18 ஆகிய தேதிகளில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஐந்து கட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தியது. அப்போது, குறிப்பிட்ட பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்தது. ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை: இந்த நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் வரும் 14-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் துறை இணையமைச்சா் ராம்நாத் தாக்குா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘விவசாயிகளுடன் ஹரியாணாவில் வரும் 14-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை மத்திய அரசு நடத்த உள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. விவாசயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த உச்சநீதிமன்றம் தரப்பில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது’ என்றாா்.

கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்... மேலும் பார்க்க

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இது தொடர்பாக எழுப்... மேலும் பார்க்க

மொழி ஆதிக்கம், நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் புகார்

நமது சிறப்பு நிருபர் ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நாடாளுமன்ற அவையைக் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மை மொழி பிரதிநிதிகள் அதை அனுதிக்க மாட்டார்கள் என்று மக்களவையிலும், நிதி ஒதுக்கீடு விவக... மேலும் பார்க்க

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர... மேலும் பார்க்க

எதிா்கால பெருந்தொற்றுகளை எதிா்கொள்ள தயாா்நிலை: மத்திய அரசு

எதிா்கால பெருந்தொற்று பாதிப்புகள், சுகாதார அவசரநிலையை எதிா்கொள்ள வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இத... மேலும் பார்க்க

‘மக்களவையில் அப்பட்டமான பொய்-அவதூறு பிரசாரம்’- ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக நோட்டீஸ்

‘மக்களவையில் அப்பட்டமான பொய்களைக் கூறியதோடு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டு... மேலும் பார்க்க