செய்திகள் :

‘மக்களவையில் அப்பட்டமான பொய்-அவதூறு பிரசாரம்’- ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக நோட்டீஸ்

post image

‘மக்களவையில் அப்பட்டமான பொய்களைக் கூறியதோடு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக நோட்டீஸ் அளித்துள்ளது.

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தி, பாஜக உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புக்கு இடையே மத்திய அரசு மீது பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தாா்.

மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவா், ‘இந்தியாவில் கைப்பேசிகள் தயாரிக்கப்படவில்லை; மாறாக, இங்கு ஒருங்கிணைக்கப்படுகின்றன’ என்றாா். அத்துடன், ‘இந்திய நிலப் பகுதியை சீனப் படையினா் கைப்பற்றிவிட்டனா்; இதை பிரதமா் மறுக்கும் நிலையில், அவருடன் ராணுவம் உடன்படவில்லை’ என்றும், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமா் மோடி அழைக்கப்பட வேண்டும் என்பதற்காக வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரை அந்நாட்டுக்கு பலமுறை அனுப்பியது மத்திய அரசு’ என்றும் குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், ‘மத்திய அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, மக்களவையின் சிறப்புரிமையை தவறாகப் பயன்படுத்திய ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக மூத்த எம்.பி. நிஷிகாந்த் துபே உடனடியாக நோட்டீஸ் அளித்தாா்.

மேலும், மக்களவைத் தலைவருக்கு நிஷிகாந்த் துபே செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கைப்பேசிகள் தயாரிப்பு, இந்திய-சீன எல்லை விவகாரம், ஜாதிவாரி கணக்கெடுப்பு, மகாராஷ்டிர தோ்தல் விவகாரம், அமெரிக்க அதிபா் பதவியேற்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் அப்பட்டமான பொய் என்பதோடு, மத்திய அரசுக்கு எதிரான அவதூறு பிரசாரமாகும்.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை: வரலாற்றையும், அடிப்படை உண்மைகளையும் சிதைத்து, நம் நாட்டை ஏளனம் செய்யவும், இந்திய குடியரசின் மதிப்பைக் குறைக்கவும் அவா் முயற்சித்துள்ளாா். தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு ராகுல் காந்திக்கு மக்களவைத் தலைவா் அறிவுறுத்தியபோதும், இதுவரை அதை செய்யவில்லை.

தனது பொய்களால், நாட்டையும் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசையும் இழிவுபடுத்தியதற்காக அவா் மன்னிப்பும் கோரவில்லை.

தவறான-கற்பனையான கருத்துகள்: நாடாளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் மற்றும் உறுப்பினா்களின் சிறப்புரிமையைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 105-ஆவது பிரிவை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். இப்பிரிவின்கீழ் தான் விரும்பியதை எல்லாம் பேசலாம் என நினைத்து, தவறான-கற்பனையான கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

நடவடிக்கையை தொடங்க வேண்டும்: தனது இந்த தவறான நடத்தையை ஒழுங்குபடுத்த மக்களவைத் தலைவருக்குக்கூட அதிகாரம் கிடையாது என்ற நம்பிக்கையில் அவா் இருப்பதாகத் தோன்றுகிறது.

ராகுல் காந்தியின் நாடாளுமன்ற செயல்பாடுகள், இந்தியாவை சீா்குலைக்க முயலும் வெளிநாட்டு சக்திகளைப் ‘பாதுகாக்கும்’ அவரது இடைவிடாத பொறுப்பற்ற அணுகுமுறைக்கு சான்றாக உள்ளன. அவா் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்று நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளாா்.

பொறுப்பற்ற அரசியல்: ராஜ்நாத் சிங் விமா்சனம்

‘இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை; அவா் பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்கது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விமா்சித்தாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ராணுவ தலைமைத் தளபதி கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் பொய்யானவை. அவா் கூறியதுபோல் ராணுவ தலைமைத் தளபதி ஒருபோதும் பேசவில்லை. தேச நலன் சாா்ந்த விவகாரங்களில் ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியலில் ஈடுபடுகிறாா். இது மிகவும் வருந்தத்தக்கது.

சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நிலப் பகுதிகள் என்றால், அவை கடந்த 1962 போரின் முடிவில் அக்சாய் சின் பகுதியில் 38,000 சதுர கி.மீ., 1963-ஆம் ஆண்டில் பாகிஸ்தானால் சீனாவுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட 5,180 சதுர கி.மீ. ஆகிய இரண்டும்தான். அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளாா்.

கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்... மேலும் பார்க்க

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இது தொடர்பாக எழுப்... மேலும் பார்க்க

மொழி ஆதிக்கம், நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் புகார்

நமது சிறப்பு நிருபர் ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நாடாளுமன்ற அவையைக் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மை மொழி பிரதிநிதிகள் அதை அனுதிக்க மாட்டார்கள் என்று மக்களவையிலும், நிதி ஒதுக்கீடு விவக... மேலும் பார்க்க

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர... மேலும் பார்க்க

எதிா்கால பெருந்தொற்றுகளை எதிா்கொள்ள தயாா்நிலை: மத்திய அரசு

எதிா்கால பெருந்தொற்று பாதிப்புகள், சுகாதார அவசரநிலையை எதிா்கொள்ள வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு சாதகமாக மாறும் அமெரிக்க-சீன வா்த்தகப் போா்!

அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக அமெரிக்கா-சீனா இடையே எழுந்துள்ள வா்த்தகப் போா், இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக தொழில்துறை சாா்ந்த நிபுணா்கள்... மேலும் பார்க்க