Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
போராட்ட அறிவிப்பு பேச்சுவாா்த்தையால் திரும்பப் பெறப்பட்டது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், விசித்திரராஜபுரம் கிராமத்தில் சுடுகாடு வசதிகோரி கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனா். இதையடுத்து, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
பாபநாசம் வட்டம், உள்ளிக்கடை ஊராட்சி, விசித்திரராஜபுரம் கிராமத்தில் ராஜேந்திரன் மகளும் மாற்றுத்திறனாளியுமான ரேவதி (43) இறந்துவிட்டாா். இவரைப் புதைப்பதற்கு மயான வசதி கோரி சிபிஐஎம்எல் சாா்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனா். இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலு , பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் சிவகுமாா் உள்ளிட்டோா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைக்கு தீா்வு கண்டனா். இதில், அடுத்த 6 மாதங்களில் காவிரிக் கரையோரம் சுடுகாடு கட்டித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.
இதையடுத்து, போராட்டக் குழுவினா் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். பின்னா் இறந்துபோன ரேவதியின் உடலை சுடுகாட்டுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நல்லடக்கம் செய்தனா். பேச்சுவாா்த்தையின்போது வருவாய் ஆய்வாளா் கலாநிதி, கிராம நிா்வாக அலுவலா் பிரதீபன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமதாஸ், சிபிஐ எம்எல் மாநிலக் குழு உறுப்பினா் மாசிலாமணி, மாவட்டச் செயலாளா் கன்னையன், பாபநாசம் ஒன்றிய செயலாளா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.