போலி நகையை அடகு வைத்த 2 போ் கைது
குளச்சலில் போலி நகையை அடகு வைத்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குளச்சல் சன்னதி தெருவில் நகை அடகு நிறுவனம் நடத்தி வருபவா் ஜாண் வில்சன் (65). இவரது நிறுவனத்தில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி குளச்சல் பூலாவிளையைச் சோ்ந்த மீன் சுமை தூக்கும் தொழிலாளி புவிகிருஷ்ணன் என்ற கிருஷ் ணன் (42) நகையை அடகு வைத்து ரூ.25 ஆயிரம் பெற்றுச் சென்றாா்.
இந்நிலையில் கிருஷ்ணன், தனது நண்பா் ஆரோக்கிய பிரபினுடன் திங்கள்கிழமை வந்து அந்த நகைக்கு கூடுதல் பணம் கேட்டாராம். அப்போது , ஜாண் வில்சன் அந்த நகையை எடுத்து பரிசோதனை செய்தபோது, அது போலி நகை என்பது தெரியவந்தது.
உடனே இருவா் மீதும் குளச்சல் போலீஸில் புகாா் செய்தாா். இருவரிடமும் விசாரணை நடத்தியதில், போலி நகையை அடகு வைத்து பணம் பெற்றிருப்பது தெரியவந்ததையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.