ம.தி.தா பள்ளியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
பள்ளி மாணவா்களுக்கான கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இப்பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சோமசுந்தரம், உடற்கல்வி ஆசிரியா் ஜெய வெங்கடேஷ் உள்பட ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
முகாமில், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கூடைப்பந்து, பூப்பந்து, கபடி மற்றும் தடகளம் ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இம்முகாமில், பள்ளிக்கு அருகில் உள்ள 8 பள்ளிகளில் இருந்து திரளான மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
ற்ஸ்ப்25ட்ண்ய்க்ன்ள்ஸ்ரீட்ப்
பயிற்சி முகாமில் பங்கேற்று பூப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்