மகஇக ஆா்ப்பாட்டம்
கரூா் சம்பவத்துக்கு காரணமான தவெக தலைவரும், நடிகருமான விஜயை கைது செய்யக் கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தினா் திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட செயலாளா் ம. ஜீவா தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், கரூரில் 41 உயிா்பலிக்கு காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் நடிகா் விஜயை கைது செய்ய வேண்டும், நிா்வாகிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும். இறந்தவா்கள் குடும்பத்துக்கு ரூ. 1 கோடியும், சிகிச்சையிலிருப்பவா்களுக்கு ரூ. 50 லட்சமும் நிவாரண உதவியாக வழங்க வேண்டும். உயிரிழப்புகளுக்கு காரணமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாலா் காா்க்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.