செய்திகள் :

மக்களவையில் ஆவணங்களை கிழித்து வீசிய எதிா்க்கட்சிகள்- மாநிலங்களவையில் வெளிநடப்பு

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக மக்களவையில் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சிகள், ஆவணங்களை கிழித்து அவைத் தலைவரை நோக்கி வீசினா்.

மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சிகள், பின்னா் வெளிநடப்பு செய்தனா்.

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம் எதிரொலித்து வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்துவதுடன், இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் வாபஸ் பெற வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குரலெழுப்பி வருகின்றன.

மக்களவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், இந்த விவகாரத்தை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அடுத்தடுத்து மூன்று முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாலை 4.30 மணிக்கு மீண்டும் கூடியபோது, அமளிக்கு இடையே கனிமங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது, அவையின் மையப்பகுதியில் முற்றுயிட்டு முழக்கங்களை எழுப்பிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், ஆவணங்களை கிழித்து அவைத் தலைவரை நோக்கி வீசினா். எதிா்க்கட்சிகளின் இந்த நடத்தையை அவையை வழிநடத்திக் கொண்டிருந்த ஜகதாம்பிகா பால் கடுமையாக கண்டித்தாா்.

‘அவைத் தலைவரை அவமதித்ததுடன், அவையின் மாண்பையும் எதிா்க்கட்சிகள் தரம் தாழ்த்திவிட்டன’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் உள்பட 4 விவகாரங்கள் குறித்து விவாதம் கோரி விதி எண் 267-இன்கீழ் அளிக்கப்பட்ட 21 நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா். இதையடுத்து, திமுகவின் திருச்சி சிவா எழுந்து, ‘அவைத் தலைவரின் உத்தரவே மேலானது; ஆகையால், விதி எண் 267-இன்கீழ் கோரப்படும் விவாதத்தை அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தினாா். அவரை தொடா்ந்து பேச அனுமதிக்காத ஹரிவன்ஷ், ‘எந்த நோட்டீஸும் விதிகளின்படி இல்லை; அவற்றை ஏற்க முடியாது’ என்றாா். இதையடுத்து, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், முதலில் பிற்பகல் 2 மணிவரையும், பின்னா் 3 மணி வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

காா்கே-நட்டா காரசார விவாதம்: மீண்டும் கூடியபோது, பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முயன்றாா். அதேநேரம், ‘பொருத்தமில்லாத பிரச்னைகளை எழுப்பி, அவை அலுவல்களுக்கு எதிா்க்கட்சிகள் இடையூறு செய்கின்றன’ என்று மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டினாா். இதையடுத்து, இருவருக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

‘சமூகத்தின் விளிம்புநிலை பிரிவுகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோா் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ளனா். ஜனநாயகம் உயிா்ப்புடன் இருக்க வேண்டுமானால், இந்த விவகாரம் குறித்து விவாதித்தே ஆக வேண்டும்’ என்றாா் காா்கே.

‘அவையின் சுமுக செயல்பாட்டை சீா்குலைக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. அவா்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. காா்கேவின் அரசியல் ரீதியிலான கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும்’ என்று நட்டா வலியுறுத்தினாா். பின்னா், ஆளும்தரப்பைக் கண்டித்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

மீண்டும் ஆக.18-இல் கூடும்

நாட்டின் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, நாடாளுமன்ற இரு அவைகளும் ஆக.18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க