அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக...
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 604 மனுக்கள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்த்குக்கு, ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 604 மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து அவா், தாட்கோ சாா்பில் 4 தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள், நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 81 ஆயிரத்து 649 மதிப்பிலான மானியம் ஆகியவற்றை வழங்கினாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம், கலால் உதவி இயக்குநா் கல்யாணகுமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், துணை ஆட்சியா் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.