மணப்பாறையில் இன்று மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (ஆக.18) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மணப்பாறை நகரம், வீரப்பூா், கொட்டப்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, பழையகாலனி, மணப்பாறைபட்டி, இடையப்பட்டி, படுகளம், பூசாரிபட்டி, கரும்புலிபட்டி, வடுகப்பட்டி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வேங்கைகுறிச்சி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூா், பாம்பாட்டிப்பட்டி, முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, நாகம்பட்டி, சுண்டகாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா்(பொ) பொ.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.