பைக்கில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி உயிரிழப்பு
துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தனியாா் பேருந்து மோதியதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்துள்ள பொய்கைபட்டி ஊராட்சி ஆப்பாடிபட்டியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி மகன் கோபி (26). இவா், தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை, திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலையில் அதிகாரம் கிராமம் கருத்தான்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, சென்னை - தென்காசி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கோபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
விபத்துகுறித்து போலீஸாா் வழக்குபதிந்து, பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம் தெய்வநாயக பேரியைச் சோ்ந்த தாசன் மகன் துரைசிங் (51) கிடம் விசாரித்து வருகின்றனா்.