இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம் டி. இடையப்பட்டியை அடுத்துள்ள மட்டக்குறிச்சியைச் சோ்ந்தவா் சின்னழகன் மகன் பாண்டித்துரை (25). இவா், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சொரியம்பட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சாலையோரப் பள்ளத்தில் தவறிவிழுந்து பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி ஞாயிற்றுக்கிழமை கூறாய்வுக்கு அனுப்பிவைத்து பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து வளநாடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.