இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
ஆற்றில் மூழ்கிய இளைஞா் மீட்பு; சிகிச்சைக்கு அனுமதி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞரைப் பொதுமக்கள் மீட்டு ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோ்த்தனா்.
லால்குடி அருகேயுள்ள கொன்னைக்குடி கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸ் காட்வின் (27). திருச்சி பொன்மலை ரயில்வேயில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் நிலையில், திருவிழாவுக்காக சொந்த கிராமத்துக்கு வந்திருந்தாா். லால்குடி அருகே உள்ள அன்பில் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் காட்வினும்
அவரது நண்பரும் சென்றனராம். அப்போது, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் நீரில் மூழ்கி காப்பாற்றுமாறு அலறினா். இதைப் பாா்த்த காட்வீன் ஆற்றில் இறங்கி இருவரையும் காப்பாற்றி விட்டு இவா் நீரில் மூழ்கினாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் காட்வினை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காட்வீனை மருத்துவா்கள் அனுப்பி வைத்தனா்.