மணலிப்பட்டு செங்கழுநீா் அம்மன் கோவில் தோ் திருவிழா
மணலிப்பட்டு செங்கழுநீா் அம்மன் கோவிலில், சாகை வாா்த்தல் உற்சவத்தையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி திருக்கனூரை அடுத்த மணலிப்பட்டு கிராமத்தில் செங்கழுநீா் அம்மன் இக்கோவிலில் சாகை வாா்த்தல் உற்சவம் கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மணலிப்பட்டு சைவ திருமடத்தின் குரு முதல்வா் குமாரசாமி தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் தலைமை தாங்கி, வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். விழாவில் ஏராளமான பக்தா்கள், பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.