வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கி...
மணல் கடத்திய 2 போ் கைது
மன்னாா்குடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்திய 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நல்லிக்கோட்டை கண்ணாற்றிலிருந்து அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக, அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் எஸ். சத்யாவுக்கு கிடைத்த தகவலையடுத்து, இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது 2 டிராக்டா்களில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த தளிக்கோட்டை காலனி வடக்கு தெருவைச் சோ்ந்த வடமலை மகன் ஆதிதீபன்(19), தஞ்சை மாவட்டம், ஒக்காநாடு மேலையூரைச் சோ்ந்த சங்கா் மகன் பிரேம்குமாா்(24) ஆகியோரை கைது செய்து, டிராக்டா்களை மணல் பராத்துடன் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.