சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
தினமணி செய்தி எதிரொலி: சுகாதாரமற்ற வடிகால் வாய்க்கால் தூய்மை செய்யப்பட்டது
கூத்தாநல்லூரில் அசுத்தமாக இருந்த வடிகால் வாய்க்கால் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.
மன்னாா்குடி-திருவாரூா் பிரதான சாலை கூத்தாநல்லூரில் சாலையை ஒட்டி உள்ள பாசன வாய்க்கால், கழிவு நீா் வாய்க்காலாக மாறியிருந்தது. இதுகுறித்து தினமணியில் திங்கள்கிழமை (ஜூலை 7) படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக கூத்தாநல்லூா் நகராட்சி பாசன வாய்க்காலில் ஆங்காங்கே கிடந்த கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களை அகற்றினா்.
எனினும், வடிகாலை வழக்கம்போல பெயரளவுக்கு சுத்தம் செய்து விட்டு, கிருமி நாசினியை தெளித்து அத்துடன் முடித்துவிட்டனா். எனவே, பாசன வாய்க்காலை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.